பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம்!!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்த பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர் சேகரித்து வைத்திருந்த பேரரசர் நெப்போலியனின் அரும்பொருள்கள், பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்து ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியன் இந்த தொப்பியைத்தான் அணிந்திருந்தார்.
இதன் காரணமாக சண்டைகளின்போது, களத்தில் தங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பதை நெப்போலியனின் படை வீர்ர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில நாள்களில் நெப்போலியன் பற்றிய ஆர்வத்தை மக்களிடம் மீண்டும் தூண்டக்கூடிய ரிட்லி ஸ்காட்டின் எனும் திரைப்படம் வெளிவரும் நிலையில், இந்த ஏலம் நடந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.