'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
முரசொலி செல்வம் பிறந்தநாளையொட்டி முரசொலி வளாகத்தில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
04:49 PM Apr 24, 2025 IST
|
Web Editor
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
Advertisement
"திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய 'முரசொலி செல்வம்' பிறந்தநாளான இன்று மாலை 35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.
அவரது 'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படுகிறது. சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article