2004ல் பேஸ்புக்கின் வருகையும்... அமெரிக்க தேர்தல் பிரச்சாரமும்...
2004ல் பேஸ்புக் முதல் முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அது அமெரிக்க அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 200வருடத்திற்கும் மேலான பாரம்பரியம் உண்டு. அமெரிக்காவின் முதல் அதிபர் தேர்தல் 1789ல் நடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகம், மக்களாட்சி, மதச்சார்பின்மை, பாலியல் சமத்துவம், சமத்துவம் போன்ற எல்லாவற்றிற்கும் முன்னோடியாக அமெரிக்காவின் சட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. இவை வெறுமனே சாதாரணமாக நடந்துவிடவும் இல்லை. இதற்கு பின்னர் பெரிய போராட்டங்களும் இணைந்தேதான் இத்தகைய மிகப் பழமையான ஜனநாயக நாடாக அவை உருவெடுத்துள்ளது.
ஃபேஸ்புக் என்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு சொந்தமான ஒரு சமூக வலைதளமாகும். 2004 ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது ஹார்வர்ட் பல்கலைக்கழக நண்பர்களான எட்வர்டோ சவெரின் , ஆண்ட்ரூ மெக்கோலம் , டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூஸ் ஆகியோர் இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார்கள். பேஸ்புக் எனும் சொல்லை மார்க் ஜுக்கர்பர்க் தலைமையிலான மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களால் வெளியிடப்பட்ட தனிநபர்களின் குறிப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டனர். அதாவது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் தனிநபர் தகவல்கள், குறிப்புகள் , புகைப்படங்கள் அடங்கிய Directory ஐ ஒவ்வொரு வருடமும் வெளியிடும். அதற்கு பேஸ்புக் என பெயர் வைத்திருந்தனர். அதுமிகவும் பிரபலமாக அறியப்படவே புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வலைதளத்திற்கு பேஸ்புக் என பெயர் வைத்துவிட்டனர் .
பேஸ்புக் உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் அரங்கில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறியது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவர் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்கும் மாணவர்கள் தங்கள் பிரச்சாரங்களுக்காகவும், விளம்பரங்களை செய்வதற்காகவும் பேஸ்புக் குழுக்களை உருவாக்கினர்.
இதேபோல 2006 ஆம் ஆண்டில், பேஸ்புக் நிறுவனம் பல்வேறு தேர்தல் தொடர்பான குழுக்களை உருவாக்கியது. அந்த குழுக்களில் " வரக்கூடிய தேர்தல் சுதந்திரமான, தடையற்ற மற்றும் கருத்துக்களை திணிக்கக்கூடாத ஒன்றாக இருக்க வேண்டும். அவைதான் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது" என்று ஒரு பதிவு வெளியிட்டு தேர்தல்களின் Pulseகளை தெரிந்து கொள்ளும் விதமாக வாக்களிக்கும் வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது. மேலும் அந்த பதிவில் எத்தனை பயனர்கள் தங்கள் சுயவிவரங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளரானபாரக் ஒபாமாவிற்கு 2007 டிசம்பர் மாதத்த்தில் 172,205 பின் தொடர்பவர்கள் மட்டுமே இருந்தனர். ஜனவரி 2008 முதல் வாரத்தில், லோவா காக்கஸ் தேர்தல்களில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஒபாமாவிற்கு பேஸ்புக்கில் 205,872 ஆதரவாளர்கள் மளமளவென அதிகரித்தனர்.
-அகமது AQ