Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும்” - வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

04:25 PM Nov 28, 2024 IST | Web Editor
Advertisement

இன்று இரவுமுதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 30ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாளை கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் தஞ்சாவூர் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.

30ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 30ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீச கூடும். நாளை மறுநாள் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி வரை 350 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புயல் மிகவும் தாமதமாக நகர்ந்து வருகிறது. நேற்று முதல் புயலின் வேகம் குறைந்துள்ளது. பல்வேறு காரணங்களால் புயலின் வேகம் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று இரவு முதல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். தற்போது புயல் கடலில் நிலை கொண்டுள்ளது. இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும். நேற்று புயலின் வேகம் குறைந்து இருந்தது. ஆனால் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இந்தப் புயலானது புயலின் ஆரம்ப கட்டத்திற்கு சென்று வலுவிழந்து விடும்” என தெரிவித்தார்.

Tags :
Fengal CycloneRainrain alert
Advertisement
Next Article