Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'தி அமெரிக்கன் பார்ட்டி' - புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார்.
11:21 AM Jun 08, 2025 IST | Web Editor
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார்.
Advertisement

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனரும் ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான எலான் மஸ்க் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.

Advertisement

அதன் பின் எலான் மாஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் '80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?' என்று கருத்து கணிப்பு நடத்தினார். இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் அதாவது, 56.30 லட்சம் பேர் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி. கட்சியின் பெயரை 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Americadonaldtrumpelon musklaunchesnew partyPresidentpresidenttrumpTeslaThe American Partytweet
Advertisement
Next Article