”தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்கலாம்”- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலுங்கானாவில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விடுதிகளை ஆந்திர மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைத்தார். பின்னர், விழாவில் பேசிய அவர்,
ஓஸ்மானியா பல்கலைக்கழகம் எண்ணற்ற அறிவுஜீவிகளை உருவாக்கிய பெருமையை கொண்டது. அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக தனி தெலுங்கானா இயக்கத்தைக் கைவிட்டபோது, புதிய மாநிலக் கனவை நனவாக்கியது உஸ்மானியா பல்கலைக்கழகம்தான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாக பணியாற்றலாம். 21 வயது நிரம்பினால்தான் அம்பேத்கர் அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும உரிமை வழங்கியது
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. தெலுங்கானாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.
21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது?. சிந்தித்து இதை ஒரு திட்டமாக எடுத்துச் செல்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்”
என்று கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயது 25 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.