Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3- வது டெஸ்ட் நாளை தொடக்கம் - லார்ட்ஸ் மைதானத்தில் சாதகம் என்ன? பாதகம் என்ன?

3- வது டெஸ்ட் நாளை தொடக்கம்: லார்ட்ஸ் மைதானம் இந்தியாவிற்கு சாதகமாக அமையுமா?
04:52 PM Jul 09, 2025 IST | Web Editor
3- வது டெஸ்ட் நாளை தொடக்கம்: லார்ட்ஸ் மைதானம் இந்தியாவிற்கு சாதகமாக அமையுமா?
Advertisement

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3- வது டெஸ்ட் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி லார்ட்ஸ் சென்றுள்ளது. முன்னதாக இங்கிலாந்து சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் 1-1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது. இதன் அடிப்படையில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், இரண்டாம் டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றது.

Advertisement

இந்நிலையில், 3-வது டெஸ்ட்க்கான போட்டி லண்டன் லார்ட்சியில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முந்தைய போட்டியில் ஓய்வு பெற்ற வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் களம் இறங்க இருப்பதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

`கிரிக்கெட்டின் மெக்கா` என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் மைதானத்தில் 1884 முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதுவரை 148 போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. இதில் இங்கிலாந்து 145 போட்டிகளில் ஆடி 59- வெற்றியும், 35- தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது. இந்திய அணி இங்கு 13 போட்டிகளில் 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் டிராவும் சந்தித்துள்ளது. மேலும் 2021-ல் கோலி தலைமையிலான இந்திய அணி 272 என்ற இலக்கை நிர்ணயிக்கவே, இங்கிலாந்து அணி 120 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது குறிப்பிடதக்கது. மேலும் ஒரு அணியின் மெகா ஸ்கோராக,1930- ல் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்ரேலியா அணி, இங்கிலாந்து எதிராக 6 விக்கெட்டுக்கு 729 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தை பொறுத்த வரை 1990-ல் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோர் ஆகும்.

மேலும், இந்த மைதானத்தில் மொத்தம் 252 சதங்களும், 610 அரை சதங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஜோ ரூட் அதிகபட்சமான 7 சதங்களை அடித்துள்ளார். இதில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கார் 3 சதங்களை விளாசி உள்ளார். தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள லோகேஷ் ராகுல் மட்டும் சதம் அடித்துள்ளார். 1990-ம் ஆண்டு இந்தியாக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் கிரஹாம் கூச் 333 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதில் ஒட்டுமொத்தமாக ஜோ ரூட் அதிக ரன் குவிப்பில் (22 டெஸ்டில் 2,022 ரன்) முதல் இடதில் உள்ளர்.

இந்த மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியதின் அடிப்படையில், இங்கிலாந்து முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (123 விக்கெட்) மற்றும் ஸ்டூவர்ட் பிராட் (113 விக்கெட்) வீழ்த்தி டாப் 2 இடங்களில் உள்ளனர். இந்தியா சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சம் 17 விக்கெட்டுகளை பிஷன் சிங் பேடி, இஷாந்த் ஷர்மா, கபில்தேவ் ஆகியோர் வீழ்த்தி உள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் மிகவும் சாதகமாவே அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷீப் இறுதி போட்டியில் வேகபந்து வீச்சாளர் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பேட்டிங் பயிற்ச்சியாளர் சிதான்ஷு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “கடந்த இரு போட்டிகளில் பார்த்ததை விட லார்ட்ஸ் மைதானத்தில் புற்கள் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. நாளைய தினம் (இன்று) புற்கள் ஓரளவு குறைக்கப்படும், அதன் பின்பு ஆடுகளம் குறித்து பேசலாம். பொதுவாக முதல் 2 இன்னிங்சில் ரன் அதிகமாக எடுக்கப்படுவதில்லை, எனவே பந்து வீச்சாளர்களுக்கு அது சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கிறோம். மொத்ததில் முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும்  பொழுது இது சவாலாகவே அமையும்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
CricketindiamatchindvsengLondonlordsgroundpumrahSportsTestMatch
Advertisement
Next Article