எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் வெளியானது!
‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து, தற்போது எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
https://x.com/anirudhofficial/status/1994029764475277621
சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், கிளிம்ஸ் வீடியோ, பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும், இப்பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பட்டுமா' தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.