Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று நடைபெறுகிறது தவெகவின் 2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.
08:04 AM Jun 04, 2025 IST | Web Editor
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.
Advertisement

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருது, பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா தற்போது 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதற்கட்டமாக கடந்த 30ம் தேதி நடைபெற கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், தவெக சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்காக ஓட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags :
Education Awards ceremonyMamallapuramtvktvkleaderTVKVijayvijay
Advertisement
Next Article