Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
06:17 PM May 17, 2025 IST | Web Editor
பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO)  பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டை நாளை(மே.18)  விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் இ.ஓ.எஸ் - 09 செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் பாய்ந்த பின்னர், அது சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் அதை நிலைநிறுத்தப்படவுள்ளது. பூமியை கண்காணிக்கும் பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி 61 என்ற ராக்கெட் சரியாக நாளை அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் சீறிப்பாயவுள்ளது.

இன்று(மே.17) காலை 7.59 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 22 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இறுதிகட்ட 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. நாளை விண்ணுக்கு செலுத்தப்படவிருப்பது இந்தியாவின் 101வது ஆகும். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் 100வது ராக்கெட்டான GSLV-F15, NVS-02 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
EOS-09ISROlaunch countdownPSLV-C61
Advertisement
Next Article