Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் - என்ன பேச போகிறார் விஜய்..?

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கூடுகிறது.
10:58 AM Nov 05, 2025 IST | Web Editor
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கூடுகிறது.
Advertisement

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அதன் தலைவரக செயல்பட்டு வருகிறார். இக்கட்சி வரும் 2026ஆம் அண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். அதன் கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ஏர்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து  ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து  தவெகவின் அ அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

இந்த நிலையில் இன்று தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்கான் ஆலோசனைகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பங்குபெறும் கட்சி நிகழ்ச்சி இதுவாகும். அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
karurstampadelatestNewsMamallapuramspecialgenralmeetingTNnewsTVKVijay
Advertisement
Next Article