Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
12:24 PM Sep 30, 2025 IST | Web Editor
புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
Advertisement

கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

இதனிடையே கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாவட்ட நிர்வாகி புவன் ராஜ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வரும் வெள்ளிக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Tags :
anticipatory bailkarurPetitionPussy AnandtvkGeneral Secretaryvijay
Advertisement
Next Article