தவெக விஜயின் திருவாரூர் பிரச்சாரம் - 26 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி விஜய் திருச்சியில் தனது சுற்றுப்பயனத்தை தொடங்கினார். தவெக தலைவர் விஜயின் இந்த சுற்றுப்பயணத்திற்கு காவல் துறையினரின் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதாக தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 20ஆம் தவெக தலைவர் விஜய் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து தவெக சார்பில் அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்படிருந்தது.
இதனை தொடர்ந்து திருவாரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் விஜயின் பிரச்சாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும், காலை 9 மணிக்குள் கட்சியினர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வர வேண்டும், ரோட் ஷோ நடத்தக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, கமலாலய குளக்கரை மற்றும் ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தில் தடுப்பு அரன்களை தமிழக வெற்றி கழகத்தினரே அமைக்க வேண்டும், போலீசாரின் நிபந்தனைகள் மீறப்படும் நிலையில் பரப்புரையை பாதியிலேயே நிறுத்த காவல்துறையினருக்கு அனுமதி உண்டு உள்ளிட்ட 26 நிபந்தனைகள் விஜயின் பிரச்சாரத்திற்கு காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.