Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் தொடர்ந்து பாராட்டும் முதலமைச்சர் #MKStalin-க்கு நன்றி" - மாரி செல்வராஜ்

12:22 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், முதல்நாள் போலவே வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போதுவரை ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கே வாழை படத்தை கண்டு களித்தார். இதனைத் தொடர்ந்து வாழை படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

” உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிலளித்துள்ள மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன், மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mari_selvaraj/status/1830478657594482715
Tags :
CMO TamilNaduMK StalinmovieVaazhai
Advertisement
Next Article