Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்" - இயக்குநர் செல்வராகவன் பதிவு!

01:51 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் இயக்கும் 'ராயன்' திரைப்படத்தில் இணைந்த இயக்குநர் செல்வராகவன் "வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்"  என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான விமர்சனத்தை பெற்றது.  அடுத்ததாக தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில்,  துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.  சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  மேலும் எஸ்.ஜே.சூர்யா,  அபர்ணா பாலமுரளி ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இதையடுத்து,  திரைப்படத்தின் பெயர் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.  வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.  தனுஷ் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் பவர்பாண்டி.  இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது  திரைப்படம் 'ராயன்' என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தனுஷின் அண்ணனும் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைந்துள்ளார். நடிகர் தனுஷை அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவனை தனுஷ் தனது திரைப்படத்தில் இயக்குமளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

இது குறித்து தனுஷ் கூறியதாவது,  "உங்களை இயக்குவேன் என ஒருநாளும் நினைக்கவில்லை செல்வராகவன் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்து செல்வராகவன் கூறியதாவது, "வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்!  இது மிகப்பெரிய திரைப்படமாக மாறும்.  உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :
#cinemaupdatesARRahmand50DhanushJayaramKalidasRayanSJSuryaSunPictures
Advertisement
Next Article