Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தஞ்சாவூர் | 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்... தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!

தஞ்சாவூர் அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
05:47 PM May 21, 2025 IST | Web Editor
தஞ்சாவூர் அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சியில் உள்ள
அரசலாற்றுப்படுகைப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 25 குடும்பங்கள் சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை குடியிருப்பு மனை பட்டாவும், இருளர் சாதி சான்றிதழும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : சேலத்தை தொடர்ந்து கோவை… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பரபரப்பு!

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்விளக்கு  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகின்றனர்.

இக்கிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குடியிருப்பு பட்டா, சாதி சான்றிதழ்  வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
cm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesThanjavurTN Govt
Advertisement
Next Article