தண்டேல் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நாக சைதன்யா, சாய்பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
07:47 PM Mar 02, 2025 IST
|
Web Editor
Advertisement
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Advertisement
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
சாய் பல்லவியின் காதல் காட்சிகள் பெரிதாக ரசிக்கப்பட்ட நிலையில், இப்படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Article