Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thalapathy69 திரைப்படத்தின் அப்டேட்!

07:13 PM Dec 02, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இப்படத்தில் நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியா மணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை அக். 4 நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், இயக்குநர் வினோத் என முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது, படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இம்மாதத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு அறிவிப்பாக போஸ்டர் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Tags :
gvmH VinothNews7TamilPooja HegdeThalapathy 69tvkvijay
Advertisement
Next Article