Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"#Thalapathy69" படத்தின் அப்டேட் - இன்று வெளியீடு

08:44 AM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்துள்ளது .

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் தி கோட். இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'தளபதி 69' படத்தை அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்துள்ளது .

Tags :
goatGoat DisastertvkTVK Thalaivar VijayvijayVijay69
Advertisement
Next Article