Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தளபதி - 69 படத்தின் டைட்டில் அப்டேட்!

05:44 PM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் டைட்டில் அப்டேட் பொங்கலன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

விஜய் நடித்து வரும் 69-வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்ததால், இந்தப் படம் அவரது திரையுலகில் கடைசி படமாக இருக்கும் என அவர் அறிவித்தார்.

இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் அரசியலை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
actorvijayH.VinothThalapathy69ThalapathyVijay
Advertisement
Next Article