தளபதி-69 First look எப்போது? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர்.மேலும் இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அறிவிப்புக்குப் பின் வேறு எந்த அப்டேட்களும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அல்லது பெயர் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தளபதி-69 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ஜன.26 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.