Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை காலை ஃபர்ஸ்ட் லுக் - #Thalapathy69 படக்குழு அறிவிப்பு

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
06:19 PM Jan 25, 2025 IST | Web Editor
தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
Advertisement
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் இணைந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Advertisement

தளபதி69 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினமான நாளை(ஜன.26) வெளியாகும் என போஸ்டருடன் அறிவித்தது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்திற்கான  ஃபர்ஸ்ட் லுக்  நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
actorvijayMamithabijuPoojaHegdeThalapathy69Thalapathy69FirstLook
Advertisement
Next Article