வெற்றிக்கு வழிவகுத்த தல தோனியின் 20ரன்கள் ; பத்திரானாவின் பக்காவான பவுலிங் - வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே!
சிவம்துபேயின் அதிரடி ஆட்டம் , பத்திரானாவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தல தோனியின் 20 ரன்கள் ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் விளையாடி ரன்களை அதிரடியாக குவிக்கத் தொடங்கினர். இஷான் கிஷன் 23 ரன்களுக்கு பத்திரானா பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்திரானா பந்துகளுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளை பத்திரானாவே வீழ்த்தினார். ஆனாலும் எதற்கும் அசராமல் ஹிட் மேனாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. வெறுமனே 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது. தோனி அடித்த 20 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான ரன்களாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணி ஹோம் கிரவுண்ட் என அழைக்கப்படும் வான்கடேவில் மஞ்சள் படையின் ஆக்ரோஷமான சப்தங்கள் சேப்பாக்கத்தை பார்த்தது போல் இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்போட்டியான ஆட்ட நாயகனாக 4விக்கெட்களை வீழ்த்திய மதீஷ் பத்திரானா தேர்வு செய்யப்பட்டார்.