Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தைப்பொங்கல் மழை : தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
09:40 AM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் தைப்பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.14) முதல் ஜன.19 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. ஜன. 14-ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே, ஜன.14 முதல் 16-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி) - 40 மி.மீ, காக்காச்சி (திருநெல்வேலி), தண்டையார்பேட்டை (சென்னை), வேளாங்கண்ணி (நாகை), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) - தலா 30 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), மாதவரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை )- தலா 20 மி.மீ. மழை பதிவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Meteorological CentreRainrain alertyellow alert
Advertisement
Next Article