Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்க தேசத்திற்கு எதிரான #TestCricket தொடர் - #RohithSharma தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

09:58 PM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியை இந்திய அணி அறிவித்துள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் இந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி , கேஎல் ராகுல் , சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), அஸ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல் , குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Tags :
Bangladeshind vs banIndiaRohit sharmaTest series
Advertisement
Next Article