Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BANvsSA | தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்... வங்காளதேச அணி தடுமாற்றம்!

09:19 PM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 81 ரன்கள் முன்னிலை பெற்று தடுமாற்றத்துடன் 3-ஆம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 308 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே 114 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து, 202 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி ஆரம்ப கட்டத்தில் தடுமாறியது.

இதற்கிடையே, மெஹிதி ஹசன் மிராஸ் - ஜேக்கர் அலி ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன்படி, வங்காளதேச அணி 3-ஆவது நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன் கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, வங்காளதேச அணி வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும், வங்காளதேச அணி இதுவரை 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags :
BAN vs SABangladeshCricketnews7 tamilSA vs BANSouth AfricaSports
Advertisement
Next Article