Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Pakistan-ல் பயங்கரவாத தாக்குதல் - குழந்தைகள் உள்பட 50 பேர் பலி!

08:25 PM Nov 21, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய எல்லையோர மாகாணங்களில் ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : #WeatherUpdate | அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா?

இதில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று (நவ. 21) இருவேறு இடங்களில் பேருந்துகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில், பேருந்தில் பயணித்த 6 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஷியைட் அமைப்பினர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Next Article