Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

06:45 PM May 06, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.

Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது,

“அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. போட்டியை நடத்துபவர்கள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக, 21ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் வெவ்வேறு விதமாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது” என்றார்.

Tags :
#SportsBCCICricketNews7Tamilnews7TamilUpdatesT20 World CupTerror Threat
Advertisement
Next Article