Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்!

11:44 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

முறைகேடு புகார்கள் நிரூபணமானதால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்,  தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,  அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் புகாரில் பதிவாளர் தங்கவேலு,  இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த தனியார் நிறுவனத்தில் இயக்குநராக தங்கவேலு இருந்தது தெரிய வந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து தங்கவேலுவை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் என தமிழுநாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.  மேலும்,  பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக,  தணிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது.  இந்த விசாரணையில் கணிப்பொறி,  உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது.  தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.  மேலும் இதுபோன்று பதிவாளர் தங்கவேலு மீதுள்ள பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால்,  அவரை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பதிவாளர் தங்கவேலுவை பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்தார்.

Advertisement
Next Article