தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளால் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தற்போது முதல் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான பொதுமக்கள் தற்போது முதலே புத்தாடைகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து அசைவ
உணவுகளை சமைத்து படையல் இட்டு சொந்த பந்தங்களுக்கு பரிமாறி தீபாவளி பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி தினத்தன்று அசைவ உணவுகளை சமைப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆடு, கோழி உள்ளிட்ட உணவுகளை அதிக அளவில் வாங்கி சமைப்பது வழக்கம்.
அதனால், தற்போது முதலே வியாபாரிகள் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை
முன்னோக்கி ஆடு, கோழிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பிரபல ஆட்டுச் சந்தைகளில் ஒன்றான பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் காலை முதல் வியாபாரம் களைகட்டியது.
குறிப்பாக, இந்த ஆட்டுச் சந்தையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்
உள்ள ஏராளமான வியாபாரிகள் வந்து விற்பனைக்காக உள்ள ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக, ரூ. 4000 முதல் ரூ.20,000 வரை ஆடுகள் விலை போன நிலையில், ஆட்டுச்
சந்தையில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், நூற்றுக்கணக்கான ஆடுகள் அதிக விலைக்கு வாங்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.