Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்காசி | அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்!

தென்காசி கடையம் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்தும், மோதினர். இதில் 20கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
04:08 PM Jan 18, 2025 IST | Web Editor
Advertisement

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து தென்காசிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொட்டிருந்தது.  அதே சமயம், பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து கடையம் வழியாக அகஸ்தியர்பட்டிக்கு அரசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது, கடையம் அருகே உள்ள  சந்தை வளைவு பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.

Tags :
AccidentBUSTenkasi
Advertisement
Next Article