Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் | மேலும் 2 நாள் நீட்டிப்பு...

07:33 AM Nov 28, 2023 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி,  கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.  கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால்,  நாளை முதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'போர் நிறுத்தத்தை நீட்டிப்பதுதான் நமது இலக்கு.  இன்னும் நிறைய பிணைக் கைதிகளை மீட்கவும்,  காஸாவில் உள்ள மக்களுக்கு நிறைய மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாக உள்ளது என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து பிணைக் கைதிகளும் வெளியேறும் வரை போர் நிறுத்தத்தைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் 2 முதல் 4 நாள்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தின் 4வது நாளான நேற்று, இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் படை விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பல பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பாலஸ்தீனர்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பிறகு மீண்டும் போர் தொடங்குமே என்று அச்சம், கவலை தெரிவித்தனர். சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், “வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமையில் நியூயார்க் நகரில் நாளை நடக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காசா போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாடி, “காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் மத்திய தரைக்கடல் நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் உதவும் என்று நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார். இதற்கிடையே, கத்தார் வெளியுறவுத்துறையின் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மேலும் 2 நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

 

Advertisement
Next Article