Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் - என்ன நடந்தது?

01:01 PM May 02, 2023 IST | Web Editor
Advertisement

காவல்துறை துன்புறுத்துவதாக கூறி கோயில் பூசாரி  ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ராம் சங்கர் தாஸ் (28) என்பவர் தற்கொலை செய்துகொண்டதை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். காவல்துறை துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.  லைவ் வீடியோவில், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட்டின் பொறுப்பாளர் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள் மீது ராம் சங்கர் தாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆனால், கோட்வாலி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மனோஜ் சர்மா, இறந்த பூசாரி முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். அவர் போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்று அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, கோயிலில் ’ராம் ஷரண் தாஸ்’ என்ற வயதான பூசாரி காணாமல் போனது தொடர்பாக ’ராம் சங்கர் தாஸ்’ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராம் சரண் தாஸ் (80) இந்த ஆண்டு ஜனவரி முதல் காணவில்லை என்று செய்தி வெளியிடப்பட்ட நிலையில், ராம் சங்கர் தாஸ் கோயில் வளாகத்தில் உள்ள அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கின் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags :
AyodhyaFacebook Livetemple priestuttar pradesh
Advertisement
Next Article