தெலங்கானா | ஒரே கட்டமாக 119 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!
119 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட தெலங்கானா மாநிலத்தில், இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து 199 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இத்தேர்தலில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்படுகிறது தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் அதே நேரத்தில் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி என்றும் இந்த இரண்டில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட பிஆர்எஸ் கட்சி இந்த முறை ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் சில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன.
மொத்தத்தில் இந்த ஐந்து மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.