Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

12:09 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல்
கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே,  ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.  அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று நிதியுதவி வரவு வைக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்? – ராகுல் காந்தி கேள்வி!

இந்த நிலையில்,  நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஹரிஸ் ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பயிர் நிதியுதவி திட்டத்துக்கு அளித்த அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.  விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

Tags :
bancropElection commissionfinancegovernmentIndiaOrderTelangana
Advertisement
Next Article