Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'BOMB' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'BOMB' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
09:59 PM Jun 26, 2025 IST | Web Editor
அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'BOMB' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

Advertisement

தொடர்ந்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட்டின் 'பாம்' (BOMB) என்ற திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 4:56 மணிக்கு பாம் படத்தின் டீசர் வெளியாவுள்ளது.

Tags :
Arjun DasBombBomb MovieBomb Teasermovietamil cinemaTeaser
Advertisement
Next Article