Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் #TeamIndia முன்னிலை!

04:37 PM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சென்னை - சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்க வைத்துள்ளது.

Advertisement

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகள் மற்றும் 71.67% உடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50% உடன் இரண்டாம் இடத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 9.17% இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 19-ம் தேதி நீண்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட சீசனை தொடங்கியது. இதில் வங்கதேசம் - 2 போட்டிகள், நியூஸிலாந்து - 3 போட்டிகள் என இந்தியாவிலும், ஆஸ்திரேலியா நாட்டில் அந்த அணியுடன் 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் புள்ளிகளை பெறுவதற்கான மிக முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

இந்த டெஸ்ட் சீசன் இந்தியாவுக்கு முக்கியமானதாகவும் உள்ளது. இதில் சிறந்து விளங்கினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம். இதுவரை இரண்டு முறை நடைபெற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி உள்ளது.

நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Tags :
Chepauk stadiumIndiaNews7TamilWest bengalworld test championship
Advertisement
Next Article