Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
11:05 AM Nov 15, 2025 IST | Web Editor
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
Advertisement

தமிழ் நாட்டில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தேர்வை ஆண்டு தோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

Advertisement

நடப்பாண்டுக்கான கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி இடைநிலை ஆசிரியர்​களுக்​கான டெட் தேர்வு தாள் -1, நவம்பர் 15-ந் தேதியும் (இன்று), பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் (நாளை) நடக்க இருக்கிறது.இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை எழுத இதுவரையில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1,241 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது

Tags :
latestNewsTeachersTeachersRecruitmentBoardtetexamTNnews
Advertisement
Next Article