Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
03:43 PM Aug 31, 2025 IST | Web Editor
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Advertisement

சென்னையில் நாளை முதல் தேநீர் (டீ), காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தேநீர் விலை ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

Advertisement

பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பெரும்பாலான கடைகளில் புதிய விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி,

டீ, பால், லெமன் டீ ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.20
ஹார்லிக்ஸ் - ரூ.20
கப் டீ - ரூ.45
கப் பால் - ரூ.45
கப் பாபி - ரூ.60
கப் ஸ்பெஷல் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி கப் - ரூ.60
பூஸ்ட் கப் ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
போன்டா, பஜ்ஜி, சமோசா ரூ.15 என உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :
ChennaiCoffeemilkpricesteaTeaShopTraders Association
Advertisement
Next Article