Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் : 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு இரங்கல் உள்பட 12 தீர்மானங்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
01:50 PM Nov 05, 2025 IST | Web Editor
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு இரங்கல் உள்பட 12 தீர்மானங்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்  மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பங்குபெறும் கட்சி நிகழ்ச்சி இதுவாகும். மேலும்  புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,நிமல்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விஜயின் தாயார் ஷோபா சந்திர சேகர் கலந்து கொண்டுள்ளார்.

பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு தவெக நிர்வாகிகள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

அவற்றில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல். கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோவை விவகாரத்தில் தி.மு.க. அரசிற்கு கண்டனம்.  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்தும் மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக தீர்மானம்.

6 கோடி வாக்காளர்களுக்கு மேல் உள்ள தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி மேற்கொள்வது எப்படி? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரிக்கை. டெல்டா மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம்

பொது நிகழ்ச்சிகளில் கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும். விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசுக்கு வலியுறுத்தல்.விஜய் பாதுகாப்பில் வேண்டுமென்றே தமிழக அரசு அலட்சியம் காட்டியது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :
latestNewsspecialgenralmeetingTNnewstvkvijay
Advertisement
Next Article