நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து - 39 பேர் உயிரிழப்பு!
நைஜீரியா நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து டேங்கர் லாரியில் நைஜர் மாகாணத்திற்கு நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.