100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவும் செய்தி - #Tamilnadu அரசு விளக்கம்!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அண்மையில், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்துள்ளது. மேலும், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : உள்நாட்டில் உருவாக்கப்பட்ட #Paramrudra சூப்பர் கம்ப்யூட்டர்கள் | நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக இணையத்தில் வைரலாகும் செய்திகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், உண்மைக்கு மாறான இந்த செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், தங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களை பார்க்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.