#TNRains | அடுத்த ஒரு வாரத்திற்கு மழை வெளுக்கும் : முக்கிய அப்டேட்!
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
"தென்தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ( அக் -27ம் தேதி) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள் : விஜய்யின் #TVK மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்?
அக்- 28ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து, அக்.29, 30,31ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளிலும் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்"
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.