#WeatherUpdate – தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழை | வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ( செப் -23ம் தேதி) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால், இன்று முதல் வரும் 28-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படியுங்கள் : #IndvsBan | டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் : வால்ஷை பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேற்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்"
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.