#Tamilnadu 6முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு - அட்டவணை வெளியானது!
தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான அட்டவணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ளது. இதன்படி காலாண்டு தேர்வு இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல டிசம்பர் மாத இறுதியில் அரையாண்டு மற்றும் மார்ச் மாத இறுதியில் முழு ஆண்டு தேர்வும் நடைபெறும்.
இதன்படி தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அட்டவணையின்படி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகள் நிறைவடைந்த பின்னர் வருகிற 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.