Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது!

10:17 AM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு இன்று  தொடங்கியது.

Advertisement

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு 10ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதையும் படியுங்கள் : விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை - அம்பாலா காவல்துறை அறிக்கை!

காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் அதன் பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என இரு வேளைகளில் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகளின் மொத்த மதிப்பெண் 25 ஆக உள்ளது. தேர்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அட்டவணை தயாரித்து எந்தவித குளறுபடியும் இன்றி செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Tags :
Class 10examExam practicesslcTamilNadu
Advertisement
Next Article