நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்… #GoldRate சற்று குறைவு | இன்றைய விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் தீபாவளி நெருங்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ( அக்.27ம் தேதி) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.58,880க்கும், ஒரு கிராம் ரூ.7,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : Delhi | மிகவும் மோசமான காற்றின் தரம் - தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!
இந்நிலையில், இன்று (அக்.28ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.350 குறைந்து ரூ.48,200க்கும், கிராம் ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே, வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.