Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தமிழக வெற்றிக் கழகம்’ - பெயர் காரணம் குறித்து மாநாட்டில் வீடியோ வெளியிட்ட விஜய்!

09:36 PM Oct 27, 2024 IST | Web Editor
Advertisement

“தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் வைக்கப்பட்டதற்கு காரணம் என்னவென, தவெக தலைவர் விஜய் மாநாட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைப்பெற்றது. இதில் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. மேலும் தங்கள் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள், கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்க காரணம் என்ன எனவும் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

வீடியோவில் கூறப்பட்டிருந்ததாவது:

“நம்ம கட்சியோட முதல் சொல் ‘தமிழகம்’.

மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கூறும் வார்த்தை கட்சியின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைதான் ‘தமிழகம். ‘தமிழகம்’ என்றால் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என்றும் சொல்லலாம்.

அகநானூறு, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, என பல இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தை தான் தமிழகம். இந்த தமிழகம் தான் அறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.

“தவெகவின் மந்திரச் சொல் ‘வெற்றி ’ ”

அரசியலில் மட்டுமல்ல, பொதுவாகவே நமக்கு ஒரு அடையாளம் வேண்டுமானால், நமது பெயர்தான் ஒரு அடையாளமாக மாற வேண்டும். அப்படி ஒரு Positive Energy அந்தப் பெயரில் இருக்கனும்; அந்த Enegryய கொடுக்குறதே, அந்தப் பெயரில் இருக்குற வார்த்தைகளோட வலிமை தான். அப்படி ஒரு நேர்மறை அர்த்தமும், நேர்மறை அடர்த்தியும், நேர்மறை அதிர்வும், நேர்மறை வலிமையும் ஒருசேர கொண்ட ஒரு சொல் இருக்கும்; என்றுமே தன்னுடைய தன்மைய இழக்காத ஒரு சொல் இருக்கும்; இந்த வார்த்தைய சொல்லும்போதே, உச்சரிப்பவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரு கூட்டமே உணர்ச்சியோட உச்சத்துல வைக்குற ஒரு சொல் அது, உற்சாகப்படுத்துற சொல் அது;

நம்ம மக்களோட நாடி, நரம்புகளில நானேற்றும் அந்தச் சொல்; அந்த வார்த்தை வேறறென்ன…வெற்றி..வெற்றி…வெற்றி..வெற்றி தான் அந்தச் சொல்; வெற்றி என்பது நினைத்ததை செய்து முடிப்பது; மனதில் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என பல அர்த்தங்களை கொண்டது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான் நம் கட்சியின் மந்திரச் சொல்லாகவும், மையச் சொல்லாகவும் மாறி நிற்கிறது.

கழகம்

மூன்றாவது சொல் கழகம். கழகம் என்றால் படை பயிலும் இடம் என்ற ஒரு அர்த்தம் இருக்கிறது. அதேப்போல் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடமாக நம் கட்சி இருக்கும். அரசியல் உலகின் அணையா சுடராக இருக்கும் நமது தமிழகம் வெற்றி கழகம். அதனால் கழகம் என்னும் சொல் சரியாக பொருந்தி நிற்கிறது. ‘தமிழகம் வெற்றி கழகம்’ இந்த 3 வார்த்தைகளை கொண்டு, மூண்டு எழுந்து இருக்கும் அரசியல் உலகின் அணையா பெரும் சுடர் தான் தமிழக வெற்றிக் கழகம்; அதைத் தொடர்ந்து கட்சி கொடியின் வண்ணம் குறித்த விளக்கத்தைப் பற்றியும் அந்த வீடியோவில் விஜய் பேசிருந்தார்.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்Tamilaga Vetri Kazhagamthalapathy vijaytvkTVK ConferenceTVK MaanaaduTVK VijayTvk Vijay MaanaduvijayvikravandiViluppuram
Advertisement
Next Article