அஜ்மானில் கோலாகலமாக நடைபெற்ற "அன்னை மொழி அறிவோம் பள்ளி"யின் ஆண்டு விழா!
துபாயில் செயல்பட்டு வரும் அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் 6-ம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது.
துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும். இதன் நிறுவனராக கங்காதரன் மற்றும் தலைவராக அனுராதா கங்காதரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் இலவச தமிழ் பயிற்சி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. தமிழ் மார்ட், அமீரகம் மற்றும் லிட்டில் ஸ்ப்ரவுட்ஸ் நர்சரி இணைந்து நடத்தும் அன்னை மொழி அறிவோம் இலவச தமிழ் பயிற்சி பள்ளியின் 6-வது ஆண்டு விழா அஜ்மானில் உள்ள ஹாபிடட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன், அஜ்மான் புளூமிங்டன் பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியை ஹுசைனா பேகம் நூர் ஷெரீப், எழுத்தாளரும், பேச்சாளருமான சசி எஸ் குமார், கவிஞர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் நடந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்தது.. அதேபோல் அன்னைமொழி அறிவோம் குழுவை வழி நடத்த உறுதுணையாக இருந்து வரும் தமிழ்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கங்காதரனுக்கு தமிழ் மாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அன்னை மொழி அறிவோம் குழுவின் தன்னார்வலர்களுக்கு தமிழ் சுடர் விருதுகளும் வழங்கப்பட்டன. தன்னார்வளர்களுக்கு தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது. மேலும் தன்னார்வலர் புனிதா மஞ்சுநாதனுக்கு அன்னை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.