Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாடு மாணவர்கள் உலகம் எங்கும் சென்று சாதிக்க வேண்டும்" | தீரன் சின்னமலை கல்லூரியை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

10:58 AM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

"தமிழ்நாடு மாணவர்கள் உலகம் எங்கும் சென்று சாதிக்க வேண்டும்"  என  தீரன் சின்னமலை கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.  

Advertisement

திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.  இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:

’’கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.  தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது.  திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும்.  அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில்,  திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால்,  வீட்டிற்கொரு பட்டதாரி  உள்ளனர்.  தமிழ்நாடு மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும்’’

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement
Next Article